கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்தது.
சிவபெருமான் துறவியாக இருந்தது முதல் இல்வாழ்க்கையில் ஈடுபட்டது வரை சிவபுராணம் சிறப்பாக விவரிக்கிறது. பிறகு அவர் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாக தனது பொறுப்பை சீராக நிறைவேற்றினார் என்பதும் நாம் அறிந்த செய்தி தான். ஆனால், சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு மகன்கள் உள்ளதை அறிந்த நாம் சிவபெருமானின் மகள்கள் பற்றி இதுவரை கேட்டறிந்ததில்லை.
சிவபெருமானுக்கு முருகனும் பிள்ளையாரும் தான் மகன்கள் என்று நினைக்கிறோம். அதைத் தாண்டி அவருக்கு மூன்று மகள்களும் இருக்கிறார்கள். அவர்கள் பெயர் அசோக சுந்தரி, மாசனா, ஜோதி என்பதாகும். ஜோதி வெளிச்சத்தின் உருவாவும் அசோக சுந்தரி உப்பின் வடிவமாகவும் மானசா பாம்பு கடிக்கு தீர்வு சொல்லும் கன்னிகையாகவும் கருதப்படுகிறார்கள். சிவனும் அவர்கள் மீது தீராத அன்பு கொண்டிருக்கிறார். அவர்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
அசோக சுந்தரி
குஜராத் மற்றும் அண்டை பிரதேசங்களில் கூறப்படும் விரதக் கதைகளில் அசோக சுந்தரி பற்றி ஒரு கதை உண்டு. பத்மா புராணத்தில் அசோக சுந்தரி பிறப்பு குறித்து பதிவிடப்பட்டுள்ளது. தனிமையில் இருந்து விடுதலை பெறுவதற்கு பார்வதி ஒரு மரத்தில் இருந்து அசோக சுந்தரியை உருவாக்கியதாக அறியப்படுகிறது. பார்வதியின் சோகத்தை நீக்கியதால் இவர் அசோக என்று அழைக்கப்பட்டார். சுந்தரி என்பது அவளுடைய அழகை குறிக்கும் சொல்லாக இருந்தது. பிள்ளையாரின் தலை சிவபெருமானால் வெட்டப்படும்போது பயந்துபோய் அசோக சுந்தரி ஒரு உப்பு மூட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சியால் தனது தாய் மீது கோபம் கொண்ட அசோக சுந்தரி, பின்னர் தனது தந்தை சிவபெருமானால் சமாதானம் செய்யப்பட்டதாகவும் கதைகள் உண்டு. இது தவிர இவருடைய இருப்பு குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. பொதுவாக அசோக சுந்தரியை உப்புடன் தொடர்பு படுத்தி கூறுவார்கள். உப்பு என்பது ஒரு முக்கிய மூலப்பொருளாகும். உப்பு இல்லையேல் சமையலில் ருசி இருக்காது.
ஜோதி
தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் ஜோதி என்ற பெயரில் கடவுள் சிலை இருப்பதை நாம் கண்டிருக்கலாம். ஜோதி என்பது வெளிச்சத்தின் கடவுள் என்பதைக் குறிக்கும். சிவபெருமானின் ஒளிவட்டத்தில் இருந்து உருவான இந்த ஜோதி, கருணையின் உருவாக படைக்கப்பட்டது.
மானசா
பெங்காலிய கிராமிய கதைகளில், மானசா என்ற பெண் கடவுள், பாம்பு கடியை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர் பாம்புகளின் அரசன் வாசுகியின் சகோதரி ஆவார். பாம்புகளின் அன்னை கத்ரு செதுக்கிய சிற்பத்தை சிவபெருமானின் விந்து தொட்டதால் மானசா உருவானதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. இந்த வகையில் இவர் சிவபெருமானின் மகளாவார். ஆனால் இவருக்கு பார்வதி அன்னை இல்லை. சண்டி என்று அறியப்படும் பார்வதி தேவி மானசாவின் மீது நம்பிக்கையற்று இருந்தார். பாற்கடலைக் கடையும்போது வெளிப்பட்ட விஷத்தை சிவபெருமான் அருந்தும்போது அவருக்கு உதவிய மானசாவை சிவபெருமானின் மகள் என்று அடையாளம் கண்டுகொண்டார் பார்வதி தேவி. ஆனாலும் சண்டி மானசாவின் மேல் அதீத கோபம் மற்றும் பொறாமைக் கொண்டு, அவளின் ஒரு கண்ணைக் குருடாக்கி விட்டார்.
பாம்புகளின் ராணி மானசாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளன்று மணவறைக்கு பாம்புகளால் ஆன நகைகளை அணிந்து கொண்டு செல்லும்படி சண்டி உத்தரவிட்டார். இதனால் மானசாவின் கணவர் ஜரத்காரு பயந்து மணவறையில் இருந்து ஓடிவிட்டார். தந்தை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மானசா கோபம் கொண்டு தனது கசப்பான வாழ்வை நினைத்து ஒரு கொடூரக் கடவுளாக மாறினார். பாம்பு கடியால் உண்டாகும் மரணத்தில் இருந்து தப்பிக்க இந்தக் கடவுளை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
__________________________________________________
கோயில் மண்டபம் என்றால் பலருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவைதான் நினைவுக்கு வரும். ஆனால் பாரம்பரியமும் பழமையும் மிக்க கோவில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா? இதோ ...
அர்த்த மண்டபம்
மகா மண்டபம்
நிருத்த மண்டபம்
பதினாறு கால் மண்டபம்
நுாற்று (அ) ஆயிரங்கால் மண்டபம்
ஸ்நபன மண்டபம்
கேய மண்டபம்
வாத்திய மண்டபம்
முக மண்டபம்
சோபான மண்டபம்
கோபுரத் துவார சாலா மண்டபம்,
ஆஸ்தான மண்டபம்
யாக மண்டபம்
புஷ்ப மண்டபம்
பூசை மண்டபம்
விஜய மண்டபம்
சுற்று மண்டபம்
உத்யான மண்டபம்
வல்லி மண்டபம்
சூர்ண மண்டபம்
நறுமணக் கலவை மண்டபம்
நீராழி மண்டபம்
கந்த மண்டபம்,
ஆபரண மண்டபம்
மஞ்சன மண்டபம்
அலங்கார மண்டபம்
வசந்த மண்டபம்
உபசாரமண்டபம்
முரசு மண்டபம்
தமிழ்வேதப் பயிற்சி மண்டபம்
தமிழ் ஆகம் மண்டபம்
புராண விரிவுரை மண்டபம்
தீட்சை மண்டபம்
வீணா மண்டபம்
கொடியேற்ற மண்டபம்
தேர் மண்டபம்
இப்படி பல மண்டபங்களைக் கொண்டது நம் கோவில்கள்...! __________________________________________________
பஞ்ச நந்திகள்
போக நந்தி - ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
பிரம்ம நந்தி - பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.
ஆன்ம நந்தி - பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.
மால்விடை - மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.
தரும நந்தி - இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.
____________________________________________
விநாயகர் வகைகள் முப்பத்து இரண்டாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது.
பதினாறு வகைகள் 'ஷோடச கணபதி’ வகைகள் என்றும், மீதி பதினாறு வகைகள், 'ஏக விம்சதி’என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
1.பால கணபதி
குழந்தையைப் போன்ற திருமேனியை உடையவர். செங்கதிரைப் போன்ற நிறத்தினை உடையவர். வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவைகளைத் தாங்கிய நான்கு திருக்கரங்களை உடையவர்.
2. தருண கணபதி
நல்ல சிவந்த திருமேனியைக் கொண்டவர். பாசம், அங்குசம், ஒடிந்த கொம்பு, கரும்புத்துண்டு, நெற்கதிர், மோதகம், விளாம்பழம், நாவற்பழம் ஆகியவைகளை அஷ்ட திருக்கரங்களில் ஏந்தியவர்.
அந்தி வானம் போன்ற நிறத்தை உடையவர், பச்சை நிறத்திலான தேவியை, இடுப்பில் ஒரு கை கொடுத்து தழுவுவது போல காட்சி கொடுக்கிறார். அபயஹஸ்தம், பாசம், பூமாலையைத் தாங்கியவர்.
6. துவிஜ கணபதி
வெண்மையான நிறத்தினைக் கொண்ட இவருக்கு, நான்கு முகங்கள் உண்டு. புத்தகம், அட்சமாலை, கமண்டலம், தண்டம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.
7. சித்தி கணபதி
பொன் நிறமும், பசுமை நிறமும் கலந்த நிறமுடைய இவர், தன் நான்கு திருக்கரங்களில், பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றுடன் துதிக்கையில் மோதகத்தையும் தாங்கியவர்.
8. உச்சிஷ்ட கணபதி
நீல நிறத்தில் காட்சியளிக்கும் இவர், ஆறு திருக்கரங்களில், இரண்டில், நீலோத்பவ மலர்களும், மாதுளம் பழம், நெற்கதிர், அட்சமாலை, வீணை ஆகியவற்றை ஏந்தியவர்.
இன்னொரு வகையில், காம மோகிதராக, பெண்ணின் மேனியில் துதிக்கையை வைத்தவராகக் காணப்படுகிறார்.
9. விக்ன கணபதி
ஸ்வர்ண நிறத்தைக்கொண்ட இவர், பத்து திருக்கரங்களில், சங்கு, சக்கரம், கோடரி, ஒடிந்த கொம்பு, கரும்பு வில், பாணம், புஷ்ப பாணம், பூங்கொத்து, பாசம், மாலை ஆகியவற்றோடு காணப்படுகிறார்.
10. ஷிப்ர கணபதி
செந்நிறத்தை உடையவர். ஒடிந்த தந்தம், கற்பகக் கொடி, பாசம், அங்குசம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும், ரத்ன கும்பத்தை துதிக்கையிலும் கொண்டவர்.
11. ஹேரம்ப கணபதி
இவர் ஐந்து முகங்களை உடையவர். பத்து திருக்கரங்களில், இரண்டு அபய, வரத முத்திரைகளைத் தாங்குவதோடு, இதர கரங்களில், பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை, மோதகம், பழம் இவர்களைத் தாக்கியுள்ளார்.
12. லட்சுமி கணபதி
வெண்மையான நிறத்தினை உடையவர். நீல நிறத்தில் தாமரைப்பூவை ஏந்திய இரு தேவிமாருடன் காணப்படுபவர். அஷ்ட திருக்கரங்களிலும், கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம், வரதம், கிளி, மாதுளம் பழம் ஆகியவைகளோடு திகழ்பவர்.
13. மகா கணபதி
செம்மையான நிறத்தினையும், பத்து திருக்கரங்களையும், மூன்று கண்களையும், முடியில் பிறைச்சந்திரனும் உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவியை இடது துடையில் இருத்தி, ஒரு கையால் அணைத்தும், இதர கரங்களில், கதை, கரும்பு, வில், சக்கரம், பாசம், தந்தம், ரத்ன கலசம், நெற்கதிர், நீலோத்பலம், மாதுளம் பழம் ஆகியவற்றைத் தாங்கியவர்.
14. விஜய கணபதி
பெருச்சாளி வாகனத்தில் ஏறியிருப்பவராகக் காணப்படும் இவர், செந்நிறத்தவர். பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.
15. நிருத்த கணபதி
பொன் போன்ற மேனியை உடையவர். ஆறு திருக்கரங்களை உடையவர். மோதிரங்கள் அணிந்த கரங்களில், பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் ஆகியவற்றைத் தாங்கி, கற்பக விருட்சத்தின் கீழ் எழுந்தருளி இருப்பவர். இவரை கூத்தாடும் பிள்ளையார் என்றும் கூறுவதுண்டு.
16. ஊர்த்துவ கணபதி
தங்க நிறத்தில் காணப்படும் இவருக்கு ஆறு திருக்கரங்கள் உண்டு. தாமரை மலரை தாங்கிய கரத்தால், பச்சை நிற மேனியளான தேவியை அணைத்தவண்ணம், தந்தம், பாணம், தாமரை, கரும்பு வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏனைய கரங்களில் கொண்டவர்.
17. ஏகாட்சர கணபதி
செந்நிறத்தை உடையவரும், செந்நிற ஆடையை தரித்தவரும், செம்மலர் மாலையை அணிந்தவருமான இவர், பத்மாசனத்தில் காணப்படுகிறார். பெருச்சாளி வாகனத்தில் ஏறிய இவருக்கு மூன்று கண்களும், முடியில் பிறைச்சந்திரனும் உண்டு.
18. வர கணபதி
சிவந்த நிறத்தை உடைய இவர், நான்கு திருக்கரங்களில், பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியைத் தாங்கியவராகக் காட்சி தருகிறார். பிறை முடியராக இருக்கும் இவருக்கு மூன்று நேத்திரங்களுண்டு.
19. திரயாக்ஷர கணபதி
பொன்னிற மேனியனான இவர், பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார்.
20. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
பேழை வயிற்றினைக் கொண்டு, ஆபரணங்கள் சூடி ஆறு திருக்கரங்களோடு காணப்படுகிறார். பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை, ஆகியவற்றையும் ஒரு கரம் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர்.
21.ஹரித்ரா கணபதி
மஞ்சள் நிறம் கொண்ட இவர், பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை, நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக விளங்குகிறார்.
22. ஏகதந்தி கணபதி
நீல மேனியரான இவருக்கு, பேழை வயிறு காணப்படுகிறது. கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு இவைகளை,நான்கு திருக்கரங்களில் தாங்கியவராகக் காணப்படுகிறார்.
23. சிருஷ்டி கணபதி
சிவந்த மேனியை உடைய இவர், நான்கு திருக்கரங்களில், பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் தாங்கியவர். பெருச்சாளி வாகனத்தில் ஏறியவராகக் காட்சி கொடுக்கிறார்.
24. உத்தண்ட கணபதி
பத்து திருக்கரங்களில், பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை ஏந்தியவர். இவரின் இடது தொடையில், பச்சை நிற மேனியளான தேவியை ஏற்றிருப்பவர்.
25. ரணமோசன கணபதி
வெண்பளிங்கு போன்ற மேனியை உடையவராய், செந்நிறப் பட்டாடை உடுத்தியவராய் தோற்றமளிக்கும் இவர், பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கியவராகக் காணப்படுகிறார்.
26. துண்டி கணபதி
நான்கு திருக்கரங்களில், அட்சமாலை, கோடரி, ரத்ன கலசம், ஒடிந்த தந்தம் இவைகளோடு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
27. துவிமுக கணபதி
இவருக்கு இரு முகங்கள் உண்டு. பசுமையான நீலநிறத்தவர். செம்பட்டாடை உடுத்தியவராய், தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை, நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.
28. மும்முக கணபதி
பொற்றாமரை ஆசனத்தில் மூன்று முகங்களோடு காணப்படுபவர். சிவந்த மேனியை உடையவர். பாசம், அங்குசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கியவராகக் காட்சி தருகிறார்.
இளஞ்சூரியன் நிறத்தில், இந்திரநீல நிற ஆடையை தரித்தவரான இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் தாங்கி, யோக நிலையில் இருப்பவராகத் தோற்றமளிக்கிறார்.
31. துர்க்கா கணபதி
பசும் பொன் நிறத்தவரான இவருக்கு எட்டு திருக்கரங்கள் உண்டு. அவைகளில், அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கிய பெரிய உருவத்துடன் காணப்படுபவர்.
32. சங்கட ஹர கணபதி
இளஞ்சூரியன் நிறத்தில், இடப்பாகத் துடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியை ஏந்தியவர். நீல நிற ஆடை அணிந்து, செந்தாமரைப் பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிப்பவர். வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கியவர்.
__________________________________________________
சிவராத்திரியன்று நடந்த புராண நிகழ்வுகள்
படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா
மகாவிஷ்ணு , மகாலட்சுமி, முருகன் ஆகியோர் சிவனருளை பெற்றனர்.
சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் - விளக்கம்
திதிகளில் சஷ்டி ஆறாவதாகும்.
ஐப்பசி அமாவாசை அடுத்து வரும்
பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய தேதிகளில் விரதமிருந்து , முருகனை வழிபடுவது சஷ்டி விரதம். நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள் குறை தீர இதை மேற்கொள்பவர். பால், பழம், எளிய உணவுகளை சாப்பிட்டு விரதம் இருப்பர். இதனால் கர்ப்பப்பை குழந்தையை தாங்கும் சக்தி பெறும்.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற சொலவடை உண்டு. நிறைய பணம் இருந்தால் தானே செலவழிக்க முடியும் என்று கருதி அதை சொல்லவில்லை. சஷ்டி திதியன்று விரதமிருந்தால் தான் அகப்பையில் (உள்ளுக்குள் இருக்கும் கர்ப்பப்பை குழந்தை தங்கும்) என்று கருதி சொல்லப்பட்டது. கடற்காற்றும், உணவு முறையில் மாற்றமும் கருத்தரிக்க தூண்டுகோலாக உள்ளதால், திருச்செந்தூரில் இதை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
3.லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
4.நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.
5.ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
6.மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.
7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
8.மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
9.வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
10.தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
11.தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
13.ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.
14.ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
15.நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.
16.திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.
17.குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
18.மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
19.வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.
20.மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.
21.லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.
22.லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.
23.மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
24.லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
25.லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.
27.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
28.லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.
29.புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
30.வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.
31.மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.
32.அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
33.இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.
34.கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
35.லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.
46.வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.
47.வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
48.வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.
49.நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
50.துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.
51.ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
52.லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.
53.திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
54.லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
55.தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.
56.சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.
57.பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.
58.திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.
59.சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.
60.கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.
62.மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.
63.வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.
64.பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
65.தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.
66.குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
67.மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
68.ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.
69.இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம்.
70.கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.
71.லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
72.வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
73.லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
74.வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
75.எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
77.பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
78.வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
79.வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
80.நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
81.மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.
82.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
83.மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
84.மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
86.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
87.வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
89.வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
90.வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.
91.வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.
92.வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
முக்கோடி கணக்கு? ஆதித்யர் 12, ருத்ரன் 11, அஸ்வினி தேவர்கள் 2, வசுக்கள் 8 ஆகியோர் மொத்தம் 33 பேர். இவர்கள்
ஒவ்வொருவருக்கும் கோடி வகை பரிவாரங்கள் இருப்பதால், முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப் பெயர்.
__________________________________________________
வனங்களும்...
கோவில்களும்...!
*கடம்ப வனம் - மதுரை மீனாட்சியம்மன் கோவில் *வேணு வனம் - திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் *செண்பக வனம்- திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்) * மது வனம் - நன்னிலம் மதுவனேஸ்வரர் கோவில் (நாகப்பட்டினம்) *குண்டலி வனம் - திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவில் (விழுப்புரம்) *மறை வனம் - வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் (நாகப்பட்டினம்) *மாதவி வனம் - திருமுருகன்பூண்டி முருகநாதர் கோவில் (திருப்பூர்) *முல்லை வனம் - திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோவில் (தஞ்சாவூர்) *வில்வ வனம் - திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில் (ராமநாதபுரம்)
__________________________________________________
கடவுளை வணங்குகிறவர்கள் வழிபாட்டு விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.
கோவிலுக்கு போனோம், சாமி கும்பிட்டோம், தல விருட்சத்தை சுற்றினோம் என்று வந்துவிடக் கூடாது. ஏன் மரத்தைச் சுற்றுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுவது அவசியம்.
சிலர் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கோவிலை வலம் வருவார்கள்.அப்படி அங்கப் பிரதட்சணம் செய்கிறவர்கள் காலை வேளையில் செய்வதே நல்லது.
சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு உகந்த நாள். அன்று மனதில் நினைத்து பிள்ளையாரை வணங்கினால் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.
துளசி விஷ்ணுவுக்கு பிடித்தமானது என்பதால் வீட்டில் துளசிச் செடியை வைத்து வழிபடுதல்
மிகவும் அவசியம்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு பூ உண்டு. உதாரணத்திற்கு சிவனுக்கு வில்வம், பிள்ளையாருக்கு அருகம்புல் என்று உண்டு. அந்தந்தத் தெய்வத்துக்கு அந்தந்தப் பூக்களை வைத்து வணங்கினால் உங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
வீட்டில் பூஜை அறையில் விக்ரகங்களை வைத்து பூஜை செய்து வருகிறவர்கள் தினமும் நைவேத்தியம் செய்யவேண்டும்.
பொதுவாக குங்குமத்தை வலது கை மோதிர விரலால் நெற்றியில் இட்டுக் கொள்வதே நல்லது.
அரி, அரன், பிரம்மா ஆகிய தெய்வங்கள் குடியிருக்கிற அரசமரத்தை பெண்கள் மட்டும்தான் வலம் வரவேண்டும் என்றில்லை. ஆண்களும் வலம் வரலாம்.
வீட்டில் தினமும் விளக்கேற்றி வழி வழிபடுகிறவர்கள் விளக்குத் தானாகவே அணைய விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். விளக்கை ஒரு பூவைக் கொண்டு அமைதி பெறச் செய்வதே நல்லது. கோயிலைச் சுற்றி வரும் போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு முறை உள்ளது. பிள்ளையாரைஒரு முறை சுற்றி வந்தால் போதும். அம்மனை தரிசிக்கும்போது நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
அரச மரத்தை 7 முறை சுற்ற வேண்டும். அதேபோல் நவக்கிரகங்களை 9 முறை சுற்ற வேண்டும்.
குடும்பத்தில் உள்ள எல்லாத் துன்பமும் நீங்க வேண்டுமானால் பெண்கள் துர்க்கையை வழிபடுவது நல்லது.
வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள் அவர்கள் வீட்டின் முன்புறத்தில் துஷ்ட தேவதைகளை விரட்ட வேப்ப மரத்தை வளர்ப்பது நல்லது. வீட்டுக்குப் பின்புறத்தில் முருங்கை மரத்தை
வளர்ப்பதுதான் நல்லது.
பெண்கள் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றுதல் கூடாது. தலைக்குக் குளித்த பின் நுனியை முடியாமல் விரித்துப் போட்டுக் கொண்டு சுற்றுதல் தவறு.
கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது. கோவிலை விட்டு வெளியே போகும்போது சில நிமிடங்கள் உட்கார்ந்து பிறகு செல்ல வேண்டும்.
அப்போது கோபுர தரிசனம் செய்வது நல்லது.
கால பைரவர் சிவபெருமானின் பிரதி என்பர். சிவன் கோவில்களில் வடகிழக்கு
மூலையில் எழுந்தருளியிருப்பார். அவர் காலத்தை உருவமாகக் கொண்ட கால புருஷன் என்பதால் 12 ராசிகளும் அவருடைய உருவப் பகுதிகள் என்று பிரஹத் ஜாதகம் என்ற நூல் கூறுகிறது. 12 ராசிகளும் ஒருங்கே பெற்ற கால பைரவரை வணங்க நவக்கிரகத் தொல்லைகள் நீங்கும்.
சிவபெருமானுக்கு 25 விதமான கோலங்களில் அருள்புரிகிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவாமி சன்னதியிலுள்ள நந்தி மண்டபத்தில் இந்த சிவமூர்த்தங்களை தரிசிக்கலாம்.
1. சந்திர சேகரர்
2. உமா மகேஸ்வரர்
3. ரிஷபாரூடர்
4. நடராஜர்
5. கல்யாண சுந்தரர்
6. பிட்சாடனர்
7. காம தகனர்
8. திரிபுராந்தகர்
9. சலந்தராரி
10. கஜசம்ஹாரர்
11. வீரபத்திரர்
12. சங்கர நாராயணர்
13. அர்த்த நாரீஸ்வரர்
14. கிராதக மூர்த்தி
15. கங்காளர்
16. சண்டேச அனுக்ரஹர்
17. சக்கர தானர்
18. விக்னப்பிரசாதர்
19. சோமாஸ்கந்தர்
20. ஏகபாத மூர்த்தி
21. சுகாசனர்
22. தட்சிணாமூர்த்தி
23. வியாக்ரபாத மூர்த்தி
24. பதஞ்சலி மூர்த்தி
25. லிங்கோத்பவர்
_________________________________________________
_
*தானங்களும் அதன் பலன்களையும் பற்றி அறிந்து கொள்வோம்.
🕉️இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும்.
🕉️மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம்.
🕉️அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
🕉️அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
🕉️அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.- வள்ளலார்.
🕉️பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன.
🕉️எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் வரும். ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும். ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை. அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் தானம் செய்வது மிக நன்று.
#அரிசி தானம் பாவங்கள் தொலையும். பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழை, அல்லது அன்னதானம் நடைபெறும் இடங்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும்.
#அன்ன தானம் தரித்திரமும் கடனும் தீரும். அன்னதானம். வறுமையும், கடன்களும் நீங்கும். சகல பாக்கியங்களும் உண்டாகும். பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வறுமையும், கடனும் நீங்கும்
#ஆடை தானம் ஆயுள் விருத்தியாகும். மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும். #எண்ணெய் தானம்
நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
#கம்பளி (போர்வை) தானம் துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
#காய்கறிகள் தானம் பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
#காலணி தானம்
பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
#குடை தானம் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
#குல தானம் (வெல்லம்) குல அபிவிருத்தி ; துக்கநிவர்த்தி
#கோ (மாடு) தானம் ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றை போக்கும். பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
#சந்தனக்கட்டை தானம் புகழ் கிடைக்கும்
#சொர்ண தானம் (தங்கம்) கோடிபுண்ணியம் உண்டாகும். குடும்ப தோஷம் நிவர்த்தி அடையும். தோஷம் விலகும்
#தண்ணீர் தானம் மனசாந்தி ஏற்படும்
#தயிர் சாதம் #பால் சாதம் ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.
#தயிர் தானம் இந்திரிய விருத்தியாகும்
#திலதானம் (எள்ளு) பாப விமோசனம்
#தீப தானம் கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
#தேங்காய் தானம் நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
#தேன் தானம் புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம்தரும் இனியகுரல் வரும்.
#நெய் தானம் நோய்களை நிவர்த்தி செய்யும். வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
#நெல்லிக்கனி தானம் ஞானம் உண்டாகும்
#பழங்கள் தானம் புத்தி, சித்தி கிட்டும். புத்ரபவுத்ர அபிவிருத்தி. பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
#பாய் தானம் பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும்
#பால் தானம் துக்கம் நீக்கும். சௌபாக்கியம்.
#பூமி தானம் பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும். இகபரசுகங்கள்
#பொன் மாங்கல்யம் தானம் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும்.
#மஞ்சள் தானம் மங்களம் உண்டாகும்
#மாங்கல்ய சரடு தானம் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
#வஸ்த்ர தானம் (துணி) சகல ரோக நிவர்த்தி. ஆயுளை விருத்தி செய்யும்.
#விதை தானம் வம்ச விருத்தியை தரும்
#வெள்ளி தானம் மனக்கவலை நீங்கும். பித்ருகள் ஆசி கிடைக்கும்.
16 விதமான தானங்களும் அதன் பலன்களும்:
1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் - இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
4.கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
5.திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6.குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
7.நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8.வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
10.சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11.தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
12.கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13.பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14.பால் தானம் - சவுபாக்கியம்
15.சந்தனக்கட்டை தானம் - புகழ்
16.அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
*தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள். அத்தகைய தானங்கள் பல வகைப்படும். கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
•அன்னதானம் - விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.
• கோ தானம் - கோலோகத்தில் வாழ்வர்.
•பசு கன்றினும் சமயம் தானம் - கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
•குடை தானம் - 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
•தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
• வஸ்திர தானம் - 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
• ஆலயத்துக்கு யானை தானம் - இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
• குதிரையும், பல்லக்கும் தானம் - இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.